பொதுவான FAQகள்

எங்களிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ).

eChannelling என்பது இலங்கை முழுவதிலும் உள்ள முக்கிய வைத்தியசாலைகளில் உங்களுக்கான வைத்தியரை முன்பதிவு செய்துக் கொள்வதற்கான ஓர் சேவையாகும். நாடளாவிய ரீதியில் 260இற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் 5,500இற்கும் மேற்பட்ட வைத்தியர்களை கொண்ட எமது வலையமைப்பானது உங்களுக்கு எந்த வகையிலும் எப்போதும் சேவையை வழங்க தயாராக உள்ளது

எங்களிடமுள்ள வைத்தியசாலைகளின் பட்டியலை பற்றி தெரிந்துக் கொள்ள, எங்களின் Hospital Network பட்டியலை பார்க்கவும். Hospital Network

                  • எந்த மொபைல் நெட்வொர்க்கிலிருந்தும் 225ஐ அல்லது SLT தொலைபேசியிலிருந்து 1225 ஐ டயல் செய்யவும்.
                    • என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிக்கவும். www.echannelling.com
                  • “eChannelling” மொபைல் அப்பிளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யவும்..
                  • eChannelling உடன் இணைந்துள்ள மருந்தகத்தினை நாடவும்.
                  • நாடளாவிய ரீதியில் eChannelling நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ள எந்தவொரு வங்கி மற்றும் தபால் நிலையத்தினை நாடவும்.  (Refer Banks)

மொபைல் அப்ளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

கீழுள்ள ஏதேனும் ஓர் தெரிவை பயன்படுத்தலாம்

                      • தெரிவு 01 : வைத்தியரின் முதற்பெயரை டைப் செய்து தேடவும் அல்லது
                      • தெரிவு 02 : வைத்தியசாலையை தேர்ந்தெடுத்து தேடவும் அல்லது
                      • தெரிவு 03 : வைத்தியருடைய நிபுணத்துவத்தை தேர்ந்தெடுத்து தேடவும்.

எந்த முறையும் உங்களுக்கு விருப்பமான வைத்தியரை தேடித் தேர்ந்தெடுக்க வழிவகுக்கும்.

                      • பின்னர் உங்களுக்கு பொருத்தமான திகதி மற்றும் வைத்தியரின் அமர்வை தேர்ந்தெடுக்கவும்.
                      • நோயாளியின் விவரங்களை உள்ளிடவும்.
                      • மேலும் விருப்பமான கட்டண முறையைத் தேர்ந்தெடுத்து தொடரவும்.

குறிப்பு: அப்பாயிண்ட்மெண்ட் காலாவதியாகும் முன் பரிவர்த்தனையை முடிக்க உங்களுக்கு அதிகபட்சம் 15 நிமிடங்கள் வழங்கப்படும்.

பணம் செலுத்தியதும், eChannelling இலிருந்து கீழ்க்கண்டவாறு நீங்கள் வழங்கிய மொபைல் எண்ணுக்கு உறுதிப்படுத்தல் SMS வரும்

Ref No Xxxxxxxx
Doctor Appointment Number
Hospital Hospital Name
Date Session Date
Time Session Time (Time may vary according to doctor’s arrival time)
                    • அப்பாயிண்ட்மெண்ட்டை ரத்து செய்தல் மற்றும் பணத்தை மீளப் பெறல் என இரண்டுமே முடியாது.
                    • வைத்தியசாலையில் நீங்கள் காட்ட வேண்டிய சேனலிங்க்கான ரசீதை இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்வீர்கள்.
                    • வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட அப்பாயிண்ட்மெண்ட்களின் தரவுகளை சேனல் இஸ்ட்ரி ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.
                  • கொழும்பிலுள்ள வைத்தியசாலைகளுக்கு வரிகள் உட்பட LKR 399
                  • கொழும்புக்கு வெளியே உள்ள வைத்தியசாலைகளுக்கு வரி உட்பட LKR 199

வைத்தியர் மற்றும் வைத்தியசாலையை பொறுத்து வைத்தியசாலை கட்டணம் மற்றும்  வைத்தியர் கட்டணம் மாறுபடும்.

இணையதளம்

                  • எட் டு பில் (Mobitel) தற்போது Mobitel mCash
                  • எந்தவொரு கிரெடிட்/டெபிட் கார்டு – விசா, மாஸ்டர்கார்டு அல்லது AMEX கார்டு ஆகியன ஏற்றுக்கொள்ளப்படும்.

eZ Cash மூலம்

Sampath Vishwa மூலம்

FriMi மூலம்

எந்த மொபைல் நெட்வொர்க் மூலமாகவும் 225 ஐ டயல் செய்யுங்கள் (Mobitel, Dialog , Airtel மற்றும் Hutch)

                  • பணம் செலுத்துவதற்கு ப்ரீபெய்டு மொபைல் கணக்கைப் பயன்படுத்தும் போது, ​​அழைப்புக் கட்டணங்கள் உட்பட, ப்ரீபெய்டு கணக்கில் போதுமான இருப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

SLT லேண்ட் லைன்ஸிலிருந்து 1225க்கு டயல் செய்யுங்கள்

                  • மாதாந்த லேண்ட்லைன் பில்லில் அப்பாயிண்ட்மெண்ட் தொகை சேர்க்கப்படும். மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளுக்காக SLT ஒதுக்கிய பக்கெட்டில் போதுமான கிரெடிட் இருந்தால் வாடிக்கையாளர்கள் அப்பாயிண்ட்மெண்ட்களை மேற்கொள்ளலாம்.

நாடளாவிய Mobitel நிலையங்கள்

                  • காசு மற்றும் கார்ட் கொடுப்பனவுகள்
                    நாடளாவிய ரீதியில் SLT பிராந்திய அலுவலகங்கள் மற்றும் நிலையங்கள்
                  • காசு மற்றும் கார்ட் கொடுப்பனவுகள்
                    நாடளாவிய தபால் நிலையங்கள்
                  • காசு கொடுப்பனவு

No Show Refundஇன் கீழ் eChannelling ஊடாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு அப்பாயிண்ட்மெண்ட்டையும் ரத்து செய்தல் மற்றும் பணம் மீளப் பெறலுக்கு கோரல் என இரண்டுமே முடியாது. (தயவு செய்து No Show Refundஇன் விதி முறைகளை வாசிக்கவும்)

எவ்வாறாயினும், வைத்தியசாலையில் வைத்தியர் அவர்களின் ஆலோசனை அமர்வைத் தொடங்குவதற்கு முன், சந்திப்பை மாற்றுமாறு நீங்கள் வைத்தியசாலையிடம் கோரலாம். நீங்கள் வைத்தியசாலையை தொடர்பு கொண்டு விசாரித்து பின்னர் அவர்களின் சேனலிங் கவுண்டருக்குச் சென்று ரத்துசெய்யக் கோரலாம். (உங்கள் சேனல் ரசீதில் வைத்தியசாலையின் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கும்)

அப்பாயிண்ட்மெண்ட் பற்றிய விபரங்கள் சேனல் இஸ்ட்ரியில் இருக்கும். அந்த செயல்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அதை திரும்பப் பெற முடியும்.

அல்லது

0710225225 மூலமாக eChannelling வாடிக்கையாளர் பராமரிப்பு மையத்தினை தொடர்பு கொண்டு SMS இனை எந்த வித கட்டணமும் இன்றி இலவசமாக திரும்ப பெற்றுக் கொள்ள முடியும்.

                  • நாங்கள் உங்களுக்கு தேவையான மருந்துகளை நியாயமான விலையில் உங்கள் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் சேவையினை வழங்குகிறோம். இதனால் உங்கள் நேரமும் பணமும் சேமிக்கப்படுகிறது.
                  • நாங்கள் மருத்துவ பரிசோதனை சேவையையும் வழங்குகிறோம். இது eChannelling மூலம் வைத்தியசாலையில் பதிவினை மேற்கொள்ள வேண்டும்.
                  • ஒரு நோயாளி ஹீமோடையாலிசிஸையும் மேற்கொள்ளலாம்.

இல்லை. நீங்கள் அப்பாயிண்மென்ட் நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாக முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். முழுத்தொகையையும் செலுத்த தவறுகையில் உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் ரத்து செய்யப்படும்.

நாட்டில் உள்ள எந்தவொரு Mobitel அல்லது SLT eChannelling முகவரிடமும் சென்று ACB கட்டணத்தை செலுத்தலாம்.

துரதிருஷ்டவசமாக இல்லை. மீதமுள்ள தொகையை வைத்தியசாலையில் செலுத்த முடியாது. நீங்கள் eChannelling மூலம் மேற்கொள்ளும் எந்தவொரு அப்பாயிண்ட்மெட்டுக்கான முழுக் கட்டணத்தையும் eChannellingஇல் தான் செலுத்த வேண்டும்.

இல்லை, இந்த அம்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியசாலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியர்களுக்கு மாத்திரமே இயக்கப்பட்டுள்ளது.

உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

                    • உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
                    • 011 2 502 225 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.
                    • நீங்கள் 225 கால் சென்டர் மூலம் அப்பாயிண்ட்மெண்ட் பதிவு செய்திருந்தால் அல்லது இணையத் தளம் வழியாக ‘எட் டு பில்’ ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்திருந்தால், அதுப்பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள 225இற்கு அழைத்து அதனுடன் தொடர்புடைய மொபைல் ஆபரேட்டரை தொடர்புக் கொள்ளுங்கள்.

இணையதளத்தில் ஏதேனும் சிரமங்களை நீங்கள் எதிர் கொண்டால் தயங்காமல் 0710 225 225 என்ற எண்ணிற்கு காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையான எந்த நேரத்திலும் அழைப்பினை ஏற்படுத்துங்கள்.