எங்களைப் பற்றி

eChannelling என்பது உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்களுக்குத் தேவையான சரியான மருத்துவ உதவியைப் பெறுவதற்கான செயல்முறையாகும். எங்கள் பயனர் நட்பு தொழிநுட்ப அமைப்பானது உங்களுக்கு மிகப் பொருத்தமான வைத்திய நிபுணரை தேர்ந்தெடுப்பதையும் உங்களுக்கான அப்பாயிண்ட்மெண்ட்களை பதிவு செய்துக் கொள்வதையும்  இலகுவாக்குகிறது.

இந்த eChannelling ஊடாக வைத்தியருடனான உங்களது சந்திப்பினை சிரமங்களில்லாத இலகுவான ஒன்றாக மாற்றுகிறோம். நாங்கள் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பொதுமக்களுக்கும் அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளுக்கும் இடையே பலமான பாலமாக செயற்பட்டு வருகிறோம். இலங்கை சுகாதார பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்தி, அதை உங்கள் விரல் நுனிக்கு கொண்டு வருவதன் மூலமாக நாட்டின் எந்த மூலையிலிருந்தாலும் உங்களுக்கான மருத்துவ தேவையை விரைவாகவும் திறன்மிக்கதாகவும் பூர்த்தி செய்வதற்கான சேவையை வழங்கும் நோக்கில் நாங்கள் செயற்பட்டு வருகிறோம்.

தனியார், பொது மற்றும் ஆயுர்வேத துறைகளில் 260இற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளுடன் சேர்த்து நீங்கள் 5500இற்கும் மேற்பட்ட வைத்திய நிபுணர்களையும் 2000இற்கும் மேற்பட்ட சேனலிங் முகவர்களையும் அனுக முடியும். மற்றைய பிரதேசங்களிலும் கூட உங்களுக்கு சேவையினை வழங்குவதற்காக நாங்கள் பல்வேறு வங்கிகள், தபால் நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுடன் இணைப்பினை ஏற்படுத்தியுள்ளோம். எங்களுடைய விரிவான மற்றும் பயன்படுத்த எளிதான தொழிநுட்ப அமைப்பினூடாக சில ‘taps’களின் மூலம் இலகுவாக முன்பதிவினை மேற்கொள்ளலாம்.

ஒரு வைத்தியரை முன்பதிவு செய்ய வேண்டுமா?

இங்கே க்ளிக் செய்யுங்கள்.