பக்கம்

பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களின் தூண்டுதலால் 28 நாட்களுக்கு ஒரு முறை வலது அல்லது இடது சூலகத்திலிருந்து ஒரு முதிர்ந்த சூல் பலோப்பியன் குழாயினூடாக கருப்பையை வந்தடைகிறது. அவ்வாறு கருப்பையை வந்தடையும் சூல், விந்துடன் சேராதவிடத்து சிதைவுக்குள்ளாகி யோனி வழியூடாக குருதியாக வெளியேறுகிறது. இதனையே மாதவிடாய் என்கிறோம். இந்த மாதவிடாய் காலங்களில் இரத்தப்போக்கு அதிகமாக இருப்பதனால், பெண்கள் உடலளவில் பலவீனமடைகிறார்கள். இதனால் ஏற்படும் வலி, அசௌகரிய உணர்வு…

இன்று நாம் அடிக்கடி கேள்வியுறும் நோய்த்தொற்றாக சிறுநீர் தொற்று மாறி வருகிறது. சிறுநீர் தொற்றினால் ஆண்களை விட அதிகளவான பெண்களே பாதிக்கப்படுகின்றனர். சுமார் 50 இலிருந்து 60 சதவீதமான பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் சிறுநீர் தொற்றுக்கு முகங்கொடுக்க நேர்கிறது. சிறுநீர் தொற்று நம் அனைவருக்கும் பழக்கப்பட்ட சொல்லாக இருந்த போதும் அது பற்றிய போதியளவு புரிதல் நம்மிடம் இல்லாமை, நாம் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள காரணமாகிறது.…

கொலஸ்ட்ரால் என்பது உடலில் உள்ள அனைத்து செல்களிலும் காணப்படும் ஒரு கொழுப்பு போன்ற பொருள். நம் உடல் உறுப்பான கல்லீரல் கொலஸ்ட்ராலை உருவாக்குகிறது. உடலின் பல செயற்பாடுகளுக்கு கொழுப்புச்சத்து அவசியமாகும் ஆனால் குருதியில் கொலஸ்ட்ரால் அதிகமாக காணப்படுமானால், இதய நோய்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம். நம் குருதியில் காணப்படும் கொலஸ்ட்ரால் வகைகள், HDL எனப்படும் கொலஸ்ட்ரால், இது உடலுக்கு நன்மை தரக் கூடியது. ஆகையால் அதன்…

இன்று ஆண் பெண் என இரு பாலினரும் அதிகமாக கவலைக் கொள்ளும் விடயமாக முகப்பருக்கள் மாறி வருகின்றன. இது இளைஞர்களிடையே எந்த அளவு தீவிரமான தாக்கத்தினை செலுத்துகிறதென்றால், முகப்பருக்களை போக்குவதற்கான தீர்வு என சந்தைகளில் எப்பொருளை விளம்பரப்படுத்தினாலும் உடனே தன்னிடமுள்ள கடைசி ரூபாய் வரை செலவழித்து அதை கொள்வனவு செய்ய தயாராக உள்ளனர். மருத்துவ நிபுணரின் பரிந்துரைகளின்றி விளம்பரங்களை நம்பி அழகு சாதன பொருட்களை கொள்வனவு செய்வதோடு…

இன்று கடந்த காலத்தை விட அதிகமாக புற்றுநோய் பற்றி கேள்விப்படுவது மட்டுமன்றி அதனால் மனிதர்களுள் ஏற்படும் பாதக விளைவுகளின் தாக்கமும் அதிகரித்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. எதுஎவ்வாறிருப்பினும் கிடைக்கப் பெற்ற தரவுகளின் அடிப்படையில் நோக்குகையில் புற்றுநோயானது மனிதர்களுள் மட்டுமன்றி விலங்குகளிலுள்ளும் இனங்காணப்பட்டுள்ளது. புராதன புதைபடிவங்களில் காணப்படும் எலும்புக் கட்டிகள், எகிப்தில் மம்மி செய்யப்பட்ட மனித சடலங்களில் காணப்படும் புற்றுநோய் மற்றும் பண்டைய பதிவுகளில் எழுதப்பட்ட புற்றுநோய் பற்றிய…

மார்பக புற்றுநோயானது உலகில் காணப்படும் பொதுவான வகை புற்றுநோய்களில் ஒன்றாகும். இதனால் பல பெண்கள் தம் வாழ்வை இழக்கின்றனர் . உலகில் நிகழ்கின்ற இறப்புகளுக்கான காரணங்களில் புற்றுநோய் குறிப்பாக மார்பக புற்றுநோய் 5ஆம் இடத்தை பிடித்துள்ளது. இலங்கையில் இந்நிலை பற்றி ஆராய்வோமேயானால் உலகின் மற்றைய பகுதிகளின் சூழ்நிலையே இலங்கையிலும் காணப்படுகின்றது. ஒரு நாளைக்கு 12 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதோடு அதில் இருவர் உயிரிழக்கின்றனர். துரதிஷ்டவசமாக, மார்பக…